"இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை" என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பங்கேற்பாளர்காச் சென்றுள்ளார். அங்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து நேற்று கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது அரசியல் வாழ்க்கைக் குறித்து பகிர்ந்துகொண்டார்.
கமல் அளித்துள்ள பேட்டியில், "இனி வரும் காலங்களில் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. தற்போது படப்பிடிப்பிலிருந்து விரைவில் திரைக்கு வர உள்ள இரண்டு படங்களோடு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்ய உள்ளேன்.
நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் 37 ஆண்டு காலமாக சமூகப் பணியில் இருக்கிறேன். இதன் மூலம் 10 லட்சம் தொண்டர்களைப் பெற்றுள்ளேன். ஒரு நடிகனாக மட்டுமே சாக விருப்பமில்லை. மக்கள் சேவகனாகவே உயிர்விட விரும்புகிறேன்" என்றார்.