"ஜெயலலிதா சிகிச்சையின்போது அவரை நான் பார்க்கவில்லை" என விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை கமிஷன் அதிகாரி ஆறுமுகசாமி நடத்தி வருகிறார். ஜெயலலிதா தொடர்புடைய அத்தனை பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விவேக், "விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் போது அதுகுறித்து பேட்டித்தருவது சட்டப்படி சரி ஆகாது. இன்னும் சில நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். ஜெயலலிதாவின் சிக்கிச்சையின்போது நான் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தேன்" எனக் கூறியுள்ளார்.
அடுத்தக்கட்ட விசாரணைக்காக விவேக் ஜெயராமன் பிப்ரவரி 28-ம் தேதி ஆஜராக வேண்டுமென விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.