தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவானது.. அரசாணைகள் வெளியீடு..

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணைகள் இன்று(நவ.13) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூர் மாவட்டத்தை பிரித்து, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என்று 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரக் கூடிய பகுதிகளின் விவரம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தென்காசி, சங்கரன்கோவில் என 2 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என 8 தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதே போல், தென்காசி மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என 8 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் இடம் பெறுகின்றன. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல், குருக்கள் பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை கொண்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் (புதியது) தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்தாக, ராணிப்பேட்டை, அரக்கோணம் என புதிய வருாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆம்பூர், நாட்றாம்பள்ளி என 4 தாலுகாக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அதே போல், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement
More Tamilnadu News
sc-puts-on-hold-local-body-polls-in-9-newly-carved-out-tn
 9 மாவட்டம் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்..  சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.. 
supreme-court-allows-local-body-election-excluding-9-districts
9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்..
why-villege-panchayat-reservation-details-not-released
கிராம ஊராட்சி வார்டு இடஒதுக்கீடு விவரம் எங்கே? சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி
tanjavur-corporation-officials-pasted-demolition-notice-in-sasikala-house-wall
தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்..
bjp-state-vice-president-arasakumar-joined-dmk-today
திமுகவில் இணைந்தார் பாஜக துணை தலைவர்.. பாஜகவினர் அதிர்ச்சி..
edappadi-palaniswami-and-o-panneerselvam-pay-tribute-at-jayalalithaa-memorial
ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அஞ்சலி
dmk-opposing-for-erecting-the-statue-of-jayalalitha-in-madurai
மதுரையில் ஜெ.சிலை திறக்க திமுக எதிர்ப்பு.. வழக்கு தொடர முடிவு
rajinikanth-will-start-new-party-in-next-year-says-tamilaruvi-manian
நடிகர் ரஜினி புது கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பேட்டி..
minister-anbalagan-quarrel-with-v-c-surappa-infront-of-governor
அமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் புரோகித் விசாரணை.. போட்டு கொடுத்த துணைவேந்தர்...
admk-wings-keeps-minister-sengottaiyan-in-distance
எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்..
Tag Clouds