நித்தியானந்தாவிற்கு தடை மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தி நுழைய முடியாது

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Oct 11, 2017, 19:31 PM IST

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜெகதலபிரதாபன் என்பவர் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

Nithyananda

அதில், ‘நித்யானந்தா சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். நித்யானந்தா நியமனத்தை ரத்துசெய்யக்கோரிய வழக்கில் ஆதீனமாக நியமனம் செய்வதற்குத் தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், ஆதீன மடத்துக்குள் செல்வது தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடையும், போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை, மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணையை நான்கு வார காலத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You'r reading நித்தியானந்தாவிற்கு தடை மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தி நுழைய முடியாது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை