அ.தி.மு.க.வுக்கு எதுக்கு அண்ணா? ஸ்டாலின் கேள்வி..

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 09:38 AM IST

பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், கட்சியின் பெயரில் மட்டும் அண்ணா எதற்கு? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு :
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு?
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை