எடப்பாடி பின்னால் இருப்பது டெண்டர் படைதான்.. டி.டி.வி.தினகரன் கிண்டல்

by எஸ். எம். கணபதி, Mar 15, 2020, 11:56 AM IST

அ.ம.மு.க.வில் இருப்பது தொண்டர் படை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் இருப்பது டெண்டர் படை என்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.ம.மு.க. இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்கப் போராடும் லட்சியப்படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்!

பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும்! அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.


Leave a reply