யாரும் வர வேண்டாம்.. அமைச்சர் வீட்டில் நோட்டீஸ் போர்டு..

by எஸ். எம். கணபதி, Mar 18, 2020, 12:33 PM IST

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், வரும் 31ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அவருக்கு வீடு உள்ளது. அந்த வீட்டின் கேட்டில் ஒரு நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது.
அதில், முதல்வர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு, வரும் 31ம் தேதி வரை அமைச்சரைச் சந்திக்க கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள வீட்டிற்கும், சென்னையில் உள்ள வீட்டிற்கும் பொது மக்களும், கட்சியினரும் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

கேரளாவில் மத்திய இணையமைச்சர் முரளிதரன் ஒரு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருந்ததால் அமைச்சர் பயந்தார். இதையடுத்து, அவர் வீட்டில் தனிமையில் இருக்கத் தொடங்கினார். இது பரபரப்பான செய்தியானது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போர்டு வைக்கப்பட்ட செய்தி கடந்த 2 நாட்களாகப் பரபரப்பாகி உள்ளது.

You'r reading யாரும் வர வேண்டாம்.. அமைச்சர் வீட்டில் நோட்டீஸ் போர்டு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை