10, 20 பேர் மட்டும் கூடியிருக்க எளிய முறையில் நடந்த திருமணங்கள்..

by எஸ். எம். கணபதி, Mar 30, 2020, 13:45 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. காரைக்குடியில் பெரியசாமி என்பவருக்கும், கிருஷ்ணவேணி என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடத்தத் திட்டமிருந்தனர். அதன்படி, இன்று திருமணம் நடந்தது.ஆனால், மணமக்களின் உறவினர்கள் 10, 12 பேர் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர். முத்துமாரியம்மன் சன்னதியில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, புறப்பட்டுச் சென்றனர்.


இதே போல், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று காலையில் உறவினர்கள் பத்து பேர் முன்னிலையில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. கோயில் நான்கைந்து நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. எனினும், கோயில் படிக்கட்டுகளில் இந்த திருமணம் நடைபெற்றது.இன்று முகூர்த்த நாள் என்பதால், பல ஊர்களிலும் இப்படி எளிய முறை திருமணங்கள் நடைபெற்றன.


Speed News

 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST
 • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

  கொரோனா பரவியது..

  நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

  May 20, 2020, 13:42 PM IST
 • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

  1325 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

  May 20, 2020, 13:37 PM IST