ஊரடங்கு விதிமீறல்.. அபராத வசூல் ஒரு கோடி ரூபாய்..

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்துத் திருப்பி அனுப்புகின்றனர். அப்படியும் ஊர் சுற்றும் இளைஞர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.
இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றி தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று(ஏப்.18) காலை வரை தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2 லட்சத்து 28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 14951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!