சென்னை, கோவை உள்பட 5 மாநகரங்களில் முழு ஊரடங்கு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கிராமப்புறங்களில் கொரோனா பரவல் குறைந்து விட்டாலும், நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டியுள்ளது.
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இதே போல், சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் வரும் 28ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந்த நாட்களில் மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை செயல்படலாம். தலைமைச் செயலகம், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, மின்சாரம், ஆவின் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படலாம்.
மத்திய அரசு மற்றும் வங்கிகள் அனைத்தும் 33 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை செயல்படும். உணவகங்களில் தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து உணவு பெற்றுக் கொள்ளலாம். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏழைகளுக்கு உதவி வழங்கலாம்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!