சென்னையில் கொரோனா தீவிரம்.. 452 பேருக்கு நோய்ப் பாதிப்பு

Tamilnadu corona cases rise to 1755.

by எஸ். எம். கணபதி, Apr 25, 2020, 10:22 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் புதிதாக 52 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று(ஏப்.24) 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683ல் இருந்து 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் 866 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். அதே போல், நேற்று 2 பேர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 22 ஆனது.


மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 13,398 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 5882 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, இது வரை 65,834 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
சென்னையில்தான் கொரோனா பரவல், சமூக பரவலாகி மாறியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கொரோனா நோயாளியுடன் ஏற்பட்ட தொடர்பில்தான் நோய் பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 452 ஆகியுள்ளது.

கோவை 141, திருப்பூர் 110, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, செங்கல்பட்டு 57, நாமக்கல் 55, மதுரை 56, திருச்சி 51 என மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிருவருக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது.

You'r reading சென்னையில் கொரோனா தீவிரம்.. 452 பேருக்கு நோய்ப் பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை