தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினர் வசூலித்த அபராதத் தொகை ரூ.4 கோடியை எட்டுகிறது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்று(மே3) முடியும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், நாளை முதல் அத்தியாவசிய தேவைகள் மற்றும் சில தொழில்களுக்குக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குத் தொடுத்து அபராதம் வசூலித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக இது வரை 3 லட்சத்து 97,886 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டனர். 3 லட்சத்து 34,438 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிகளை மீறியவர்களிடம் 3 கோடியே 90 லட்சத்து 23,419 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.