அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா..

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர் . தற்போது அமைச்சர் கே.பி.அன்பழகன், 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.


இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணிக்குக் கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. அவரை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தார். கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அமைச்சரின் மனைவி, மகன் தரணிதரன், மருமகள் மற்றும் 2 கார் டிரைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!