மதுரையில் கொரோனா பாதிப்பு 5,757 ஆனது.. பலி 101 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மதுரையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று 3680 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதில் 44 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30,261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4163 பேரையும் சேர்த்தால், இது வரை 82,324 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 64 பேரையும் சேர்த்தால் 1829 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது வரை தமிழகத்தில் 14.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை.

சென்னையில் நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 74,969 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 242 பேருக்கும், திருவள்ளூரில் 219 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 5 ஆயிரத்தை ஏற்கனவே தாண்டி விட்டது.

இந்நிலையில் மதுரையில் நேற்று 192 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. மேலும், இன்று காலையில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் மொத்தம் 5,757 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு 101 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் அதிகமானோருக்கு நோய் பரவியிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!