`நான் மட்டும் என்னத்துக்கு இங்க இருக்கணும்? -ஹெச்.ராஜா தொல்லையால் கதறும் பாஜக தலைமை

BJP Leadership

by Sasitharan, Jul 30, 2020, 14:02 PM IST

OBC இட ஒதுக்கீடு குறித்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு உடனே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராகப் பார்க்கப்படும் இந்தத் தீர்ப்பை அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வரவேற்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு தங்களால் தான் கிடைத்தது முழங்கிவருகின்றனர்.இந்நிலையில் தான் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசினார் பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன்.

மேலும் ``கல்விக் கொள்கையில் உள்ளவைகள் பொதுவானது.பாடத்திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த வருடம் முதல் ஆயிரக்கணக்கான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஓ பி சி இட ஒதுக்கீடு அளித்திருக்கிறோம். தனியார் பங்களிப்பு கூடாது என்று சொல்லும் தமிழக அரசியல்வாதிகள், தனியாரிடம் கல்வியைக் கொடுத்து எத்துணையோ வருடங்களாகி விட்டது. முற்போக்கு , பிற்போக்கு என்றால் என்ன?. உயர் நீதிமன்றத்தில் ஓ பி சி இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது வரை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தன எதிர்க் கட்சிகள். மோசடியான சதிச் செயல்." என்று விவாதங்களில் பங்கேற்றுப் பேசினார்.

ஆனால் நாராயணனின் பேச்சை பாஜகவின் மற்ற நிர்வாகிகள் ரசிக்கவில்லை எனப் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. காரணம், மத்திய அரசை எதிர்த்துத் தான் தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் இந்த வழக்கைத் தொடுத்தன. இந்த தீர்ப்பே மத்திய அரசுக்கு எதிராகத் தான் பார்க்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் இந்த தீர்ப்பை மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பி OBC பிரிவு மக்களை பாஜகவுக்கு எதிராகத் திசைத் திருப்பும் முயற்சியாகத் தான் ஆளும் அதிமுக உட்படத் தமிழக கட்சிகள் செயல்படத் துவங்கியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், நாராயணன் தீர்ப்பை வரவேற்றுப் பேசியிருப்பது புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது" என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

இதனால் நாராயணனுக்கு, அக்கட்சியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசகுமார் பாணியில் அவர் திமுகவில் இணையப் போகிறார் என்று கமலாலயத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சமீபத்தில்தான் வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம், கடந்த வாரம் திமுகவில் இணைந்தார். பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனும் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான தேதி குறித்து வருகிறாராம். இப்படி பாஜக கூடாரம் அடுத்தடுத்து காலியாகிக் கொண்டிருப்பதால் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்துபோயிருக்கிறாராம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன். அடுத்தடுத்து ஏன் இத்தனை பேர் விலகுகிறார்கள் என்று முருகன் விசாரணை நடத்தியிருக்கிறார். அதில், பெரும்பாலானோர் ஹெச்.ராஜாவின் தொல்லை தாங்க முடியாமலே கட்சி தாவிவருவதாக தெரிய வந்திருக்கிறது. இதனால், நான் மட்டும் என்னத்துக்கு இங்கே இருக்கணும்? என்று முருகன் புலம்பி வருகிறாராம்.

You'r reading `நான் மட்டும் என்னத்துக்கு இங்க இருக்கணும்? -ஹெச்.ராஜா தொல்லையால் கதறும் பாஜக தலைமை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை