தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப் ஸ்டேசன் உள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில், மலையேற்றத்திற்கு சென்ற பெண்கள் உட்பட 39 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், ''குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என தெரிவித்துள்ளார்.