தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும் இதன் எதிரொலியாக 36 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில், பல இடல்களில் வெயில் துவங்கி வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், இலங்கை-கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் எதிரொலியாக, அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு நிலை மண்டலமாக உருவாகி மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com