இழுத்துமூட இருந்த சொந்த ஊர் பள்ளி.. ஊர் தலைவர் முயற்சியால் உதித்த நம்பிக்கை!

sivaganga panchayat leaders good effort

by Sasitharan, Aug 21, 2020, 22:04 PM IST

தற்போது நமது மக்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து காணப்படுகிறது. தனியார் பள்ளியில் படித்தால் தான் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும் என்று தனியார் பள்ளியைத் தேடி ஓடுகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அறவே குறைந்து வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகங்களும், அரசும் திணறி வருகின்றன. சில பள்ளிகளில் குறைவான மாணவர்களை வைத்து பள்ளிக்கூடங்கள் நடத்த சில பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் இழுத்து மூடப்படும் நிலையம் ஏற்பட்டு வருகிறது.

அப்படி ஒரு நிலையை தான் காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி எதிர்கொள்ள இருந்தது. இந்த தொடக்கப் பள்ளியில் 6 மாணவர்களே இருந்தனர். இதனால் பள்ளியை வேறு பள்ளியுடன் இணைக்கும் நிலைமை ஏற்பட்டது. இதனிடையே தான், மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் தங்கள் சொந்த ஊர் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துள்ளார்.

அவரின் மகள் ரூபினி (9), மகன் கோகுலஹரிபாலா (6) இருவரையும் முதலில் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்த அவர், தனது ஊரின் பள்ளி மூடப்படும் நிலையை அறிந்து, அதனை தடுத்துள்ளார். திருவாசகத்தின் நடவடிக்கையை அடுத்து தற்போது, அந்த ஊரில் உள்ள மற்றவர்களும், தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். இதன்பயனாக, மாரந்தை அரசு பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் திருவாசகம் ஈடுபட்டு இருக்கிறார்.

இதுகுறித்து திருவாசகம், ``எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இழுத்து மூடப்படும் நிலைக்கு போனது. இதனை தடுக்கவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் எனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் முதலில் சேர்த்தேன். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பெருமிதப்படுக்கிறார். இவரின் முயற்சியை நாமும் பாராட்டலாமே!

You'r reading இழுத்துமூட இருந்த சொந்த ஊர் பள்ளி.. ஊர் தலைவர் முயற்சியால் உதித்த நம்பிக்கை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை