பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று திருச்சியில் நடந்த மாநில இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், இருக்கலாம். ஆனால் அப்படி சேர்பவர்கள், சேர்ந்தபிறகு பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம். அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி உறவு சிறப்பாக இருக்கிறது. எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை.
60 இடங்களில் எங்கள் கட்சி தற்போது தனித்து நின்றாலும் வெற்றி பெறும். மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. ராமரா, முருகனா என்பது முக்கியமல்ல. இருவருமே கடவுள் தான். முருகனின் கந்த சஷ்டி குறித்து அவதூறு பரப்பியதால்தான் நாங்கள் போராடினோம். ஆனால் அந்த அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் பின்னணியில் திமுக இருக்கிறதா என்பதை ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.