தமிழகத்தில் இது வரை 4.63 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 7836 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.7) 5783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 63,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5820 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 4,186 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 88 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7836 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 51,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று 955 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 41,654 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 361 பேருக்கும், கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 246 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 28,311 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,311 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 28,311 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் 200க்கு குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போல், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.