“ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்காக புதிய வசதி “ - வருகிறது இ–பெட் ரோல் திட்டம்...!

A.C New facility for non-second class box passengers - Coming e-Pet Roll scheme

by Loganathan, Sep 9, 2020, 12:38 PM IST

தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் "இ-பெட் ரோல் " .

ரெயில் பயணத்தின் போது குளிர்சாதன ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதேபோல் ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அந்த வசதி கிடைக்கும் வகையில் இ–பெட் ரோல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சில குறிப்பிட்ட ரெயில்களில் முதற்கட்டமாக நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரத்தில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நடைமுறைக்கு வந்து தற்போது செயல்பாட்டில் உள்ளது.

பயன்கள்
படுக்கை விரிப்பு, தலையணை

ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகள் ரெயில் பயணத்தின் போது பயன்படுத்தும் வகையில் தலையணை, படுக்கை விரிப்பு, கம்பளி போர்வை இ–பெட் ரோல் திட்டம் மூலம் சில ரெயில் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது.
2 படுக்கை விரிப்பு, ஒரு தலையணை ரூ.140–க்கும், ஒரு கம்பளி போர்வை ரூ.110–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்–லைனில் www.irctctourism.com என்ற இணையதளத்துக்கு சென்று இதை புக்கிங் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
விரிவாக்கம்
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த திட்டம் சென்னை சென்டிரல் மற்றும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையங்களில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள பிற ரெயில் நிலையங்களிலும் இதை விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
விரைவில் இந்த திட்டம் பிற ரெயில் நிலையங்களிலும் அமலுக்கு வரும். தற்போது சென்னை சென்டிரலில் இந்த திட்டம் மூலம் நாளொன்றுக்கு 2 படுக்கை விரிப்பு மற்றும் ஒரு தலையணை அடங்கிய ஒரு செட்டை 10 பேர் வரை முன்பதிவு செய்து பெறுகிறார்கள்.

மேலும் அறிந்துகொள்ள www.irctc.com

You'r reading “ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்காக புதிய வசதி “ - வருகிறது இ–பெட் ரோல் திட்டம்...! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை