தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் !

Tamil Nadu Electricity Family Pension Security Scheme!

by Loganathan, Sep 18, 2020, 21:29 PM IST

திட்டத்தின் நோக்கம்
ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டதே மேற்கூறிய திட்டம். இத்திட்டத்தின்படி,

1) ஓய்வூதியதாரரின் இறப்புவரை அவருடைய மாத ஓய்வூதியத்திலிருந்து ரூபாய். 70/- பிடித்தம் செய்யப்படும்.

2) இத்திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு பின் ஓய்வூதியதாரர் இறக்க நேரிடின் மற்றும் ரூபாய். 70/- வீதம் 12 மாதங்கள் செலுத்தியிருந்தால் மட்டுமே அவரது மனைவி அல்லது வாரிசுதாரக நியமிக்கப்பட்டவருக்கு ரூபாய். 25,000- வழங்கப்படும்.

3) திரட்டப்பட்ட நிதியானது ஏதாவது ஒரு நிதியாண்டில் முற்றும் தீர்ந்துவிடும் பட்சத்தில், இறந்த ஓய்வூதியதாரரை சார்ந்தவர்கள் அதே தொகையின் உரிமைக் கோருதலை அடுத்த நிதியாண்டில் புதுப்பித்துக் கொள்ள தகுதியுடையவராவர்.

4) பணியாளர்கள், ஒப்பளிக்கும் அதிகாரமுடைய தலைமை அகநிலை தணிக்கை அலுவலருக்கு (CIAO) நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

5) மனைவி உயிருடன் இல்லாத நிலையில் ஓய்வூதியதாரரால் நியமிக்கப்பட்டவருக்கு பணம் வழங்கப்படும். ஏற்கனவே நியமனம் வழங்கப்படாவிட்டால் வாரிசுதாரர்களுக்கு தொகை சமமாக பிரித்துக் கொடுக்கப்படும். மனைவி உயிருடன் இருந்தால் நியமனம் தாக்கல் செய்ய தேவையில்லை. திருத்திய ஆணையின்படி ஓய்வூதியதாரருக்கு முன்பே மனைவி இறந்து விட்டால் ஓய்வூதியதாரர் எந்த ஒரு நபரையும் அவரது விருப்பப்படி தொகையை பெற்றுக் கொள்ள நியமனம் செய்யலாம்.

6) ஓய்வூதியதாரருக்கு பின்னர் நியமனதாரர் இறந்து விட்டாரானால் இத்திட்டத் தொகை வழங்கப்படும் முன் இறக்க நேரிடும் பட்சத்தில் இத்தொகையானது நியமனதாரருடைய வாரிசுதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓய்வூதியதாரது வாரிசுகளுக்கு அளிக்கப்படமாட்டாது. (வாரிய செயல்முறை ஆணை எண் 21, நாள். 26.3.97 - குறிப்பாணை எண். 4046/ Q2 , 98-2, 14.3.98 மற்றும் குறிப்பாணை எண், 92153 - Q2 , 98-2, நாள்.26.3.99).

இத்திட்டத்தில் சேருவதற்கான தேர்வுரிமை
இத்திட்டமானது தேர்வுரிமைக்கு உட்பட்டதாகும். ஓய்வூதியதாரர் இத்திட்டத்தில் சேருவதற்கு எழுத்து மூலமாக தன் விருப்பத்தை தெரிவிக்கலாம். (அல்லது) ஓய்வுபெறும் நேரத்தில் தனது விருப்பத்தை ஓய்வூதிய கருத்துருக்களுடன் வாரிய தணிக்கை கிளைக்கு அனுப்பலாம், ஓய்வூதியதாரர் இத்திட்டத்தில் சேர்ந்த பின் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள தலைமை அகநிலை தணிக்கை அலுவலருக்கு விருப்பம் தெரிவித்தால் அதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது திருப்பி வழங்கப்படும். தலைமை அகநிலை தணிக்கை அலுவலர் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவித்தபின் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும். (குறிப்பாணை எண்,54935 - Q3 , 97-7, நாள். 2.6.1998)

நியமனம்
நியமனமானது மூன்று படிவத்தில் ஓய்வு பெற்ற நபர்களால் வாரிய தணிக்கை பிரிவில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு நியமனப்பதிவின் போதும் நியமனம் சம்பந்தப்பட்ட குறிப்பு ஓய்வூதிய வழங்கல் ஆணை எண்ணை இரு பகுதியிலும் குறிப்பிட்டு பின் நியமனம் படிவத்தின் ஒரு நகல் ஓய்வூதியம் வழங்கும் அலுவலரது கையொப்பத்துடன் ஓய்வூதியதாருக்கு வழங்கப்பட வேண்டும்.

இனிவரும் எதிர்காலத்தில் (குறிப்பாணை எண், 92153 - Q2 , 98-2, நாள் 26.03.99 ன்படி) தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் மனைவி இல்லாமல் இருந்தால் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் அவர்களின் குடும்ப நல பாதுகாப்பு நிதியை பெறுவதற்குரிய நபரின் பெயரை நியமிக்கப்பட்ட மனுவிலும், ஓய்வூதிய ஒப்பளிப்பு மனுவிலும் குறிப்பிட வேண்டும். மேற்கண்டவற்றை ஓய்வூதியம் வழங்கக்கூடிய அதிகாரி அவர்களால் ஓய்வூதியம் பெறும் ஆணையில் குறிப்பிடபட வேண்டும்.

ஒப்பளிப்பு தொகை வழங்குவதற்கான மனு
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் ஒப்பளிப்பு தொகையை பெறுவதற்காக தலைமை அகநிலை தணிக்கை அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

அ) அனைத்து விபரங்களுடன் விண்ணப்பம்

ஆ) ஓய்வூதியதாரரின் இறப்புச் சான்றிதழ் (அசல்)

இ) தொகை கோருபவரது பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல்.

ஈ) தொகை கோருபவர் வாரிசுதாரர்களாக இருந்தால், அசல் வாரிசு சான்றிதழ்.

உ) மற்ற வாரிசுதாரர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்ட வாரிசுதாரர் (தொகை பெறக்கூடியவர்) இந்தியன்.

You'r reading தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் ! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை