ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் நடராஜன்

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் புதியபார்வை நடராஜன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1989ஆம் ஆண்டு ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார். என்னவென்றால், தான் அரசியல் வாழ்க்கையை விட்டே ஒதுங்குவது என்பது. அரசியலில் இருந்து விலகி ஹைதராபாத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அப்போது திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஏனென்றால், எம்.ஜி.ஆரின் மறைவு; அதனைத் தொடர்ந்து அதிமுக அணியில் பிளவு மற்றும் மோதல் என தொடர்ந்து சளிப்படைந்து வந்தார். இதனால் ஜெயலலிதா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி, அதன் நகல்களை சபாநாயகரிடமும் பத்திரிகைகளிடமும் ஒப்படைக்கச் சொல்லி கார் ஓட்டுநரிடம் கொடுத்து விடுகிறார்.

ஆனால், ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதை நடராஜன் விரும்பவில்லை. மேலும், ஜெயலலிதா முழுக் கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக சில உளவுக் கூட்டத்தை நடராஜன் வைத்திருந்தார். ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், அவருக்கு நெருக்கமானவர்கள் ஆகியவற்றை கண்காணிப்பதே இந்த குழுவின் நோக்கம்.

இதனால், கார் ஓட்டுநரிடம் இருந்து கடிதத்தை கைப்பற்றிய நடராஜன், அதனை பதுக்கி வைத்து விடுகிறார். தனது ராஜினாமா கடிதம் மறுநாள் செய்தித்தாள்களில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால், கடும் கோபமடைந்த ஜெயலலிதா, நடராஜனின் இல்லத்திற்கே சென்று பயங்கரமாக கடிந்து கொண்டுள்ளார். இந்த மோதல் விவகாரம் திமுக தரப்புக்கு தெரியவர, நடராஜனை கைது செய்ததோடு கடிதத்தையும் கைப்பற்றி பகிரங்கப்படுத்தியது. ஆனால், அதன்பின் ஜெயலலிதா, தனது ராஜினாமா முடிவை கைவிட்டுவிட்டு அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

நடராஜனின் கதை:

1943-ம் ஆண்டில் தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் பிறந்த நடராசனுக்கு, இளம் பருவத்திலேயே தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால், 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை நடராசன் முன்னெடுத்து நடத்தியவர்.

இதனால், திமுக தலைவர் அண்ணாவின் கவனத்தையும் நடராசன் ஈர்த்தார். திராவிட அரசியலில் உள்ள ஈடுபாட்டால், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். தொடக்கக்காலத்தில், திமுக மாணவரணி செயலாளராக நடராசன் பொறுப்பு வகித்தார். அதனைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன்.

1975ஆம் ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை நடராசன் திருமணம் செய்துகொண்டார். சசிகலா- நடராசன் திருமணத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், 1982ஆம் ஆண்டு கடலூரில், அரசு செய்தி தொடர்பாளராக இருந்தபோது, மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா மூலம் நடராசன்-சசிகலா தம்பதிக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்து தொடர்ப்பு ஏற்பட்டது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனார்.

1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், நடராஜனின் நடவடிக்கைகளை கண்டு எரிச்சல் அடைந்த ஜெயலலிதா நீண்ட காலம் அவரை, தூரமாகவே வைத்திருந்தார்.

எந்த நடராசனின் கண்காணிப்புக்குள் ஜெயலலிதா இருந்தாரோ, அதே நடராசனை தனது முழு நேர கண்காணிப்பிற்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. இதனால், நேரடியான அரசியல் ஈடுபாட்டில் தலையிடாத நடராசன், ஜெயலலிதா மறைவுக்குப் பின்தான் சிறிது தலைக்காட்ட ஆரம்பித்தார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>