இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஆனால் கடந்த வாரம் இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு முடிந்தது . இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4850க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து , கிராமானது 4810க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4810
8 கிராம் ( 1 சவரன் ) - 38480
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5093 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 40 குறைந்து , கிராமானது ரூபாய் 5053 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5053
8 கிராம் - 40424
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 1.40 , கிராம் 62.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 62900 க்கு விற்பனையாகிறது.