இன்றைய தங்கத்தின் விலை 25-09-2020

Today-s-gold-rate-25-09-2020

by Loganathan, Sep 25, 2020, 11:29 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . ஆனால் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச் சந்தையில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4764க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 41 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4805க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4805
8 கிராம் ( 1 சவரன் ) - 38440

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5002க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 41 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5043க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5043
8 கிராம் - 40344

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 2.70 உயர்ந்து , கிராம் 63.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 63100 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 25-09-2020 Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை