பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து எச். ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலைக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டார். ஜே.பி. நட்டா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆன பிறகு கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.புதிய பட்டியலில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை.
மேலும் தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்த எச். ராஜாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.புதிய நிர்வாகிகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதோடு கட்சி நிர்வாகப் பதவிகளில் சேர்க்கப்படாமல் உள்ள சிலர் அமைச்சரவை பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம் என்று பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விரைவில் அமைச்சரவை மாறுதல் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
கட்சியின் துணைத் தலைவர்கள்
1.டாக்டர் ராமன் சிங் எம்எல்ஏ
2.வசுந்தரா ராஜே சிந்தியா எம்எல்ஏ
3.ராதா மோகன் சிங் எம்பி
4.வைஜயந்த் ஜே பண்டா
5.ரகு பீர் தாஸ்
6.முகுல் ராய்
7ஸ்ரீமதி ரேகா வர்மா எம்பி
8.ஸ்ரீமதி அன்னபூர்ணா தேவி
9.ஸ்ரீமதி பாரதி பென் சஹியால்
10.ஸ்ரீ எம் சுபா ஓஓ
11.ஸ்ரீ அப்துல்லா குட்டி
பொதுச் செயலாளர்கள்
1.புபேந்தர் யாதவ் எம்பிஅருண் சிங் எம்பி
2.கைலாஷ் விஜய் வர்ஜியா
3.துஷ்யந்த் குமார் கௌதம் எம்பி
4.ஸ்ரீமதி டி புரந்தீஸ்வரி
5.ரசிடி ரவி எம்எல்ஏ
6.ஸ்ரீ தருன் சூக்
7.திலிப் சைக்கியா எம்பி
அமைப்பு - பொதுச் செயலாளர்
1.பி எல் சந்தோஷ்
இணைப் பொதுச் செயலாளர்கள்
1.ஸ்ரீ வி சதீஸ்
2.ஸ்ரீ சாவுதான் சிங்
3.ஸ்ரீ சிவப்பிரகாஷ்
பொருளாளர்
1.ராஜேஷ் அகர்வால்
இணைப் பொருளாளர்
1.சுதிர் குப்தா
தேசிய செயலர்
1.வினோத் தாவடே
தேசிய ஐடி மற்றும் சோசியல் மீடியா
1.அமித் மாளவியா
2.தேஜஸ்வி சூர்யா-யுவ மோர்ச்சா
3.கே லட்சுமணன்-ஓபிசி செல்
4.ராஜ்குமார் சவுகான்- கிசான்மோர்சா
5.லால் சிங் ஆர்யா-எஸ் சி மோர்ச்சா
6.மீர் ஓரான்-எஸ்டி- மோர்ச்சா
7.ஜமால் சித்திக்-மைனாரிட்டி மோர்ச்சா
8.அனில் பலுனி-தலைமை பேச்சாளர்.
மீடியா பொறுப்பு
1.சஞ்சய் மியூஹ்-