மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையப்பட்டி பகுதியில் ஏராளமானோர் மஞ்சள் செவ்வந்தி பூ பயிரிடுகின்றனர். தற்போது அதிக உற்பத்தி கிடைத்துள்ளது . ஆனால் உற்பத்தி செய்த பூக்களை விற்பனை செய்ய வழி இல்லாத நிலை உள்ளது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விலை பூவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பூக்களை i பறிக்கும் கூலி, வண்டி வாடகை , போக்குவரத்து உள்ளிட்ட உற்பத்தி செலவு கிலோவிற்கு 30 ரூபாய் வரை செலவு ஆவதால் செடியிலிருந்து விவசாயிகள் பூக்களை பறிக்காமலேயே விட்டு விடுகின்றனர். இதனால் பூக்கள் செடியுடன் வீணாகி விடுகிறது. இதன் மூலம் தங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர் உரிய விலை கிடைக்காத காரணத்தினால் பறிக்க முடியவில்லை மற்றும் போக்குவரத்து செலவு இருப்பதால் பூக்கள் செடியிலேயே வீணாகி அழியும் நிலை உள்ளது என திருப்பரங்குன்றம் விவசாயிகள் கூறுகின்றனர்.