தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வர முயற்சி செய்கிறோம்... முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி..!

We are trying to bring BJP rule in Tamil Nadu. - pon.Radha Krishnan

by Balaji, Sep 28, 2020, 20:10 PM IST

தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அது நன்றாகவே நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை மாற்றி வளம் மிக்கதாக மாற்ற வேண்டும் என்பதற்காக என்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்குமோ, அதற்காக நிபுணர் குழுவை நியமித்து, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் பிரதமர் மோடி எடுத்த முடிவு இந்த சட்டம்.

இதை விவசாயிகள் வரவேற்கின்றனர். விவசாயிகளை வைத்து அரசியல் நடத்த விரும்புகிறவர்கள் தான் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர்புதிய வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சட்டம் குறித்து முழு விபரங்கள் தெரிய வரும் போது விவசாயிகள் முழுமையாக வரவேற்பார்கள் என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு
ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்பதவிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாங்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தமிழகத்தில் பாஜக கட்சியை ஆளும் கட்சியாகக் கொண்டு வரக்கூடிய பணி எங்கள் பணி. அதற்கான முன்னெடுப்பை நாங்கள் மேற் கொண்டிருக்கிறோம்.அது நிச்சயமாக நல்ல முறையில் நடக்கும் என்றார்.அதிமுக செயற்குழு கூட்டம் குறித்த கேள்விக்கு அந்தக் கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அவர்களுடைய பிரச்சனை, அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் , அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அதுபற்றி நான் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை