தனியார் வங்கியான HDFC வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதில் தமிழக காவல் துறையில் பணிபுரிவோருக்காக சம்பள கணக்கு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் படி சம்பள கணக்கை தொடங்குபவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ( பெற்றோர்/ வாழ்க்கைத்துணை/குழந்தைகள்) இலவச டெபிட் கார்டு உடன் குறைந்தபட்ச இருப்பு இல்லாத (Free Zero Balance Family Accounts ) கணக்கு தொடங்கலாம்.
குடும்ப உறுப்பினர், வாடிக்கையாளர் விபத்தால் உயிரிழந்தால் ரூ.1 இலட்சம் தனிநபர் விபத்துக்காப்பீடு, டெபிட் கார்டுகளுக்கு ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும்.
காவலர்களுக்கு என உடனடியாக விரைவாகக் கணக்கைத் தொடங்க எளிய நடைமுறை "இன்ஸ்டன்கிட்" இலவசம்.
தொலைந்த/ திருடுபோன கார்டுகள் மற்றவர்களால் கடைகளில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டகருந்தால் அந்தத்தொகைக்கு கணக்குதாரர் பொறுப்பேற்க வேண்டியதில்லை ( கார்டுக்கு ரூ 4 இலட்சம் வரை ) .
நாடு முழுவதிலும் உள்ள HDFC வங்கியின் ஏ.டி.எம்கள் மற்றும் பிற வங்கி ஏ.டி.எம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சம்பளக் கணக்குதாரர்களுக்கு ரூ.30 இலட்சம் தனிநபர் விபத்துக்காப்பீடு ( உயிரிழப்பு ) இலவசம். மேலும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 30 இலட்சம் காப்பீடு இலவசம் மற்றும் பகுதி அளவுக்கு ஊனம் ஏற்பட்டால் 5 இலட்சம் இழப்பீடு இலவசம்.
சம்பளக்கணக்கு காரர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விமான விபத்துக்காப்பீடு இலவசம். மேலும் 11 % வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் போன்ற பல்வேறு சலுகைகளை பெறலாம்.