இயக்குனர் டி.ராஜேந்தர் 80, 90களில் அளித்த ஒவ்வொரு படங்களும், பேசப்பட்டதுடன் படத்துக்கு படம் ஹீரோயின்களையும் அறிமுகப்படுத்துவார். அந்த வரிசையில் நளினி, அமலா, ரேணுகா, மும்தாஜ், ஜீவிதா என பல ஹீரோயின்களை அறிமுகம் செய்தார். ஒவ்வொருவரும் திசைக்கொருபக்கமாக பிரிந்து நடித்த வருகின்றனர்.
மைதிலி என்னை காதலி படத்தில் அமலா அறிமுகமானார். பிறகும் ரஜினி, கமல்;ஹாசன் என 80. 90களின் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை மணந்து கொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நீண்ட வருடம் நிறுத்தி வைத்த அமலா சில ஆண்டுகளுக்கு முன்புதான் தனக்கு பிடித்த வேடமாக இருந்தால் மட்டும் ஏற்று நடிக்கிறார். தமிழில் அவர் நடித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஷர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். ரீத்து வர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது 18வது தயாரிப்பின் படப்பிடிப்புப்பணிகளை மீண்டும் துவங்கியிருக்கிறது. எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்த் உடன் ரீத்து வர்மா, அமலா அகினோனி, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தை ஸ்ரீகார்த்திக் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகின்றார்.
இப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் நடிகை அமலா. மீண்டும் தமிழ்சினிமாவில் படப்பிடிப்பு வேலைகள் துவங்கியது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நாங்கள் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக எதிர்பார்க்கிறோம் என்றார்.
You'r reading 30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இயக்குனர் டி.ராஜேந்தரின் கதாநாயகி. Originally posted on The Subeditor Tamil