பிரபல நடிகரின் பட ஒடிடி ரிலீஸுக்கு தியேட்டர்களில் போஸ்டர் ஒட்டி பரபரப்பு..

Large Baner And Mass Poster Grand for Vijay sethupathis Movie on OTT Relase

by Chandru, Oct 2, 2020, 12:45 PM IST

கொரோனா ஊரடங்கு சினிமா துறையை முடக்கி போட்டதுபோல் வேறு எந்த துறையையும் முடக்கி போடிருக்கிறதா என்று சொல்வதற்கில்லை. சினிமா தியேட்டர்கள்தான் சினிமாவின் உயிர்நாடியாக இருந்து வந்தது. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரவேண்டும் என்பது போல் எந்த சூப்பர் ஸ்டார் படம் ரகசியாக எடுக்கப்பட்டாலும் கடைசியில் தியேட்டருக்கு தான் வர வேண்டும் என்ற நிலை இருந்தது.கொரோனா வந்து அந்த சிஸ்டத்தையே உடைத்தெறிந்துவிட்டது.

தியேட்டர் மூடியிருந்தாலும் கவலை இல்லை ஒடிடி தளங்கள் இருக்கிறது என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஜோதி காவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, யோகிபாபுவின் காக்டெய்ல் போன்ற படங்கள் வரிசையாக ஒடிடியில் வெளியானது. அடுத்து சூர்யா நடித்துள்ள சூரைப்போற்று படம் ஒடிடியில் இந்த மாதம் இறுதியில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் க/பெ ரணசிங்கம் படமும் ஒடிடி ரிலீஸுக்கு விற்கப்பட்டது. இப்படம் இன்று ஜீபிளக்ஸ், ஜீ5ல் ஒடிடியில் வெளியாகிறது. இதையடுத்து படம் தியேட்டரில் ரிலீஸ் செய்வதுபோல் ஊரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. ஜோதி தியேட்டரில் இதற்கான போஸ்டர் பேனர் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் ரணசிங்கம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் எபெஃக்ட் தருவது போல் காணப்படுகிறது.


க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பூ ராம், வேல ராமமூர்த்தி, பவானிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். பெ.விருமாண்டி இயக்கி உள்ளார்.
தியேட்டரில் வெளியிட்டால்தான் பேனர் கட்டி ரசிகர்கள் பட்டாசு வெடிப்பார்கள் என்ற நிலையும் இனி மாறிவிடும் போலிருக்கிறது. ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்கள் கொடிகட்டி பட்டாசு வெடிப்பார்கள் என்ற புதிய சிஸ்டத்தை கொரொனா ஊரடங்கு கற்றுத் தந்திருக்கிறது. ஒடிடியில் வெளியாகும் ஒரு படத்துக்கு இப்படி பேனர் வைத்து, போஸ்டர் ஒட்டி அமர்க்களம் செய்திருப்பது இதுதான் முதல்முறை.

இதற்கே இப்படியென்றால் இன்னும் சூர்யா படத்திற்கெல்லாம் தெறிக்கவிடு வார்கள் போலிருக்கிறதே. அரசியல் வாதிகள் ஒரு கணக்கு போட்டால் ரசிகர்கள் இன்னொரு கணக்குபோடுகிறார்களே எனறு பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இது ரத்தப்பூமி இங்கு குழாய திறந்தா தண்ணி வரது ரத்தம் தான் வரும்ன்னு வின்னர் படத்தில் வடிவேல் வசனம் பேசுவதுபோல் இது சினிமா பூமி நீங்க சினிமாவ முடக்க முடக்க அது வேறு ரூபத்துல வந்துக் கொண்டுதான் இருக்கும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் ஹீரோக்களும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை