ஜெ. கைரேகை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில், சிறைப் பதிவேட்டில் உள்ள அவரது கைரேகையை தாக்கல் செய்யக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Mar 22, 2018, 13:17 PM IST

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில், சிறைப் பதிவேட்டில் உள்ள அவரது கைரேகையை தாக்கல் செய்யக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது பெங்களூர் சிறை பதிவேடுகளில் இருக்கும் ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு வெளியான அன்றே ஏ.கே. போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று புதனன்று [21-03-18] இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், பெங்களூரு சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading ஜெ. கைரேகை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை