வீட்டின் படுக்கை அறையை நோட்டமிட்ட சைக்கோ…கோவையில் சைக்கோ தொல்லையால் பீதி..

Psycho looks at the bedroom of the house has been recorded in cctv footage

by Logeswari, Oct 8, 2020, 10:33 AM IST

சைக்கோ இரவு வேளையில் வீட்டின் உள்ள படுக்கை அறையின் ஜன்னலை திறந்து நோட்டம் செய்த காட்சி சிசிடிவியில் பதிவாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் 10 மாதத்திற்கு முன்பு சைக்கோவின் நடமாட்டம் இருந்ததுள்ளது. இதனை குறித்து அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இதை அடுத்து சைக்கோவின் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் நுழைந்த சைக்கோ வண்டியை சாலையில் நிறுத்தி விட்டு ஒரு வீட்டின் கம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் படுக்கை அறையை நோக்கி சென்று அங்கு மூடபடாதிருந்த ஜன்னலை திறந்து வீட்டின் உள்ளவர்களின் நடமாட்டத்தை கவனித்து கொண்டு இருந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டதால் தனது வாகனத்தை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். ஆனால் சைக்கோ உள்ளே நுழைந்தது முதல் எல்லா செயல்களும் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. பதிவான காட்சிகள் வைத்து அப்பகுதியை சேர்ந்த காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Crime News

அதிகம் படித்தவை