ஸ்மார்ட்போன் ஃப்ரீ... சாம்சங்கின் அதிரடி அறிவிப்பு

Smartphone Free ... Samsungs Action Announcement

by SAM ASIR, Oct 8, 2020, 10:38 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் 'ஹோம், ஃபெஸ்டிவ் ஹோம்' என்ற தலைப்பில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. விலை தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இலவச பரிசுகள் என்று அநேக சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கொடுக்கிறது. இந்த சிறப்பு விற்பனை 2020 நவம்பர் 20ம் தேதி வரைக்கும் நடைபெறும்.

ஸ்மார்ட்போன் இலவசம்

55 அங்குல க்யூஎல்இடி மற்றும் 65 அங்குல யூஎச்டி சாம்சங் தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் வெகுமதியாகக் கிடைக்கும். 4 ஜிபி இயக்கவேகம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் போனின் விலை ரூ.14,999/- ஆகும். 6 ஜிபி இயக்கவேகம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் போனின் விலை ரூ.16,499/- ஆகும்.

65 அங்குல க்யூஎல்இடி மற்றும் க்யூஎல்இடி 8கே, 70 அங்குலம் மற்றும் அதற்கு அதிகமான கிறிஸ்டல் 4கே யூஎச்டி சாம்சங் தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.19,999/- விலையுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இலவசமாகக் கிடைக்கும்.

கேலக்ஸி நோட் இலவசம்

சாம்சங் நிறுவனத்தின் ஸ்பேஸ்மேக்ஸ் ஃபேமிலி ஹப் குளிர்சாதனப் பெட்டியை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.37,999/- விலையுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்டை வெகுமதியாகப் பெற்றுக்கொள்வர்.

சாம்சங் இணையதளத்தில் இதற்கான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Special article News

அதிகம் படித்தவை