சீக்கன் பீஸில் எலும்பு இல்லை.. சப்ளையரை கடுமையாக தாக்கிய திமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீச்சு..

There is no bone in the chicken.Police net to the DMK official who severely attacked the supplie

by Logeswari, Oct 14, 2020, 21:01 PM IST

சென்னையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்த திமுக பிரமுகர் ஒருவர் சிக்கனில் எலும்பு இல்லை என்று சப்ளையரை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கரையான்சாவடி பகுதியில் உள்ள பாண்டியன் ஓட்டல் ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. திமுக பிரமுகரான கார்த்திக் என்பவர் நேற்று அக்கடைக்கு சென்று சாப்பிட சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று சாப்பிடும் பொழுது சிக்கன் பிஸில் கடிக்க எலும்பு இல்லாததால் ஆத்திரம் அடைந்து மீண்டு அதே கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அந்த கடையின் சப்ளையரான சாகுல் அமீது என்பவர் திமுக பிரமுகரை சமாதானம் செய்தார். ஆனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்து சாகுலை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அவரது கன்னத்தில் கார்த்திக் இரண்டு முறை பளார் பளார் என்று அறைந்துள்ளார். பிறகு சுற்றி இருந்த மக்கள் கார்த்திக்கை சமாதானம் செய்து வைத்து கூட்டத்தை கலைத்தனர். ஆனால் கார்த்திக் அறைந்த அறையில் சாகுலுக்கு காது கேட்காமல் போனது.இதனால் இவர் ஆத்திரம் அடைந்து போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸ் கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை