கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், வெயிலில் வாட்டி வதங்கி சோர்வடைந்துள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நற்செய்தியை அறிவித்துள்ளது.
ஆம், தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.