பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைந்தது. நேற்றும் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் முடிந்தது. பங்குச்சந்தை விடுமுறை நாளான இன்று, தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபிடன் அவர்கள் மீண்டும் பழைய அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்று கூறியது உலக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட்டிக்கு வட்டி மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை இந்த விலை குறைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4863 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.183 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4680 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4680
8 கிராம் ( 1 சவரன் ) - 37440
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5106 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.52 விலை குறைந்து, கிராமானது ரூ.5054 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5054
8 கிராம் - 40432
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 40 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65400 க்கு விற்பனையாகிறது.