அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் சாத்தூா் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

Advertisement

சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.இராஜ வர்மன், நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்கச் சொன்னார்கள். இப்பொழுது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னைத் தரக்குறைவாகப் பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே ஆறு மாதமாகக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.

என்னை இந்த தொகுதிக்கு முதல்வரும் துணை முதல்வரும் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வைத்து இருக்கிறார்கள் இந்த வேலைக்காரனைப் பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் என்னைத் தூக்கி எறியுங்கள் என்றார்.சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு சாத்தூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>