பிரசவத்திற்கு சென்ற இடத்தில் கள்ளக்காதல்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப் பாறை சேர்ந்த லிங்கம் என்பவரின் மகள் சத்யபிரியா. இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வசந்த பாண்டி என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணமாகி ஏழு மாதங்களுக்கு பின்பு குழந்தை பெறுவதற்காக தாய் வீட்டிற்கு வந்த சத்யபிரியா, குழந்தை பெற்ற பின் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வேலைக்கு சென்ற சத்யபிரியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் லிங்கம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 8 மாதங்களாக போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சத்யபிரியாவின் செல்போன் எண்ணிற்கு அடிக்கடி போன் செய்து பேசிய சாத்தூர் கம்மாச்சூரங்குடியைச் சேர்ந்த ஞானகுருசாமியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்காத ஞானகுருசாமியை போலீசார் தங்களுக்கான பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது, சத்யபிரியாவுக்கும்-ஞான குருசாமிக்கு இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக உருவாகியது தெரியவந்துள்ளது. வீட்டிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததும், ஒருகட்டத்தில், சத்தியபிரியா தன்னை திருமணம் செய்து எங்காவது கூட்டிக் கொண்டு செல்லாவிட்டால், தன் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சத்யபிரியாவை அழைத்து சென்று, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஞானகுருவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு கிடந்த சத்யபிரியாவின் எலும்புக் கூட்டை சேகரித்து தடயவியல் துறை ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

சத்யபிரியா காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஞானகுருவை சிறையில் அடைத்தனர்.

Advertisement
/body>