பல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகள்

நிபியா, ஏர்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக இருந்தார். அப்போது, நிபியாவிற்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில், தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நிபியா தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக தனது காதலனுக்கு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து வாட்சப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நிபியா உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் நிபியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அதில், "என்னைப் பற்றி தெரிந்தும் என்னை காதலித்தாய், ஆனால் என்னால் மாற முடியவில்லை. நான் செய்த தவறுகளை திருத்திகொள்ள முடியவில்லை. உன்னை காதலிக்க நான் தகுதியானவள் இல்லை" என்றும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அதில் எழுதி வைத்துள்ளார். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
/body>