ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன அதிகாரிக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்த பாறை பகுதி. இந்தப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த கோவை மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் சந்தன மரக் கட்டைகள் பதுக்கி இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன உதவி அலுவலர் தலைமையில் வனத்துறையினர் 15 பேர் அங்குச் சென்றனர். மோப்பநாய் உதவியுடன் அந்த தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில்அங்குள்ள ஒரு கட்டடத்தில் சுமார் 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த சந்தனக் கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா அல்லது கோவை பகுதியில் இருந்து கடத்தப்பட்டு இங்குப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.













