விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு ...!

Five killed in firecracker blast near Virudhunagar

by Balaji, Oct 23, 2020, 19:02 PM IST

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பெண்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் மாநகனேரி என்ற இடத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இன்று பிற்பகலில் பட்டாசுகளில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டதின் காரணமாகப் பலத்த சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.

எனினும் ஒரு பட்டாசு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியானார்கள். மேலும் மூவர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்த தகவலறிந்து விருதுநகரில் மற்றும் திருவில்லிப்புத்தூரில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. டி. கல்லுப்பட்டி போலீசார் இது குறித்து பட்டாசு ஆலையைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தக் அழகர்சாமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை