தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் கொரோனாவால் இழப்பு ஏற்படக்கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.

Interview with minister kadambur Raji

by Balaji, Oct 25, 2020, 13:53 PM IST

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அதனால் ஒரு இழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தான் அரசு கவனமாக இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது : எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எப்போதுமே அரசைக் குறை கூறி தான் வருகிறார். எதிர்க்கட்சி என்றால் அரசியல் தான் செய்யும். அவியலா செய்யும்? என்று கூறியுள்ளார். அறிஞர் அண்ணா ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்களை போல் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செயல்படவில்லை. இதே மாதிரி பேசி வந்தால் மக்கள் நிச்சயம் இவரை நிராகரிப்பார்கள். பண்டிகை காலங்களில் திரையரங்களை திறப்பதில் நாங்களும் ஆவலாக இருக்கிறோம் ஆனால் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவித்துள்ளது.

அதன்படி 50 சதவீதம் இரு கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்படலாம் . ஒவ்வொரு காட்சியிலும் இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் இடைவெளியில் மக்கள் வெளியே செல்ல முடியாது. 3 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற நெறிமுறைகள் இருக்கிற வேளையில் இதெல்லாம் சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் வரும் 28ஆம் தேதி இது குறித்து தமிழக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்பிறகு இதெல்லாம் சாத்தியமா என்பது குறித்து அவர் முடிவு செய்வார். திரையரங்குகள். திறக்கப்பட வேண்டும் அதேபோல் திறப்பதனால் மக்கள் ஒருவருக்கு கூட கொரோனா பாதித்து இழப்பு ஏற்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது என்றார்..

You'r reading தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் கொரோனாவால் இழப்பு ஏற்படக்கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை