மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா இருந்து உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது. இதற்கிடையே, இன்று அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வந்து, கவலைக்கிடமாக உள்ள துரைக்கண்ணு உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. ``மேலும், துரைக்கண்ணுவின் முக்கிய உறுப்புகளை சீராக இயங்க வைக்கும் பணி சவாலானதாக உள்ளது. முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை. அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும். எனினும் தற்போது அவருக்கு அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.