கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய் உதவியுடன் சோதனை

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தலைத் தடுக்க மோப்ப நாய் உதவியுடன் கம்பம் நகரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

by Balaji, Oct 29, 2020, 10:11 AM IST

தமிழக கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ளது கம்பம். இங்குக் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிற்குக் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மூலமும் , கார்கள் மூலமும் கஞ்சா கடத்தப்படுகிறது. குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் இந்த கடத்தல் ஆசாமிகள் கேரள காவல்துறையினரிடம் பிடிபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவைக் கண்டறியும் வகையில் மோப்ப நாய் வெற்றி இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது.கம்பம் வாரச்சந்தை , கஞ்சா வழக்கில் சிக்கியவர்களின் வீடுகள், பழைய குற்றவாளிகள் , கஞ்சா கடத்தல் ' நடந்த இடங்கள் மற்றும் தமிழக கேரள எல்லை சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றில் மோப்பநாய் மூலம் தீவிரமாகச் சோதனை நடத்தப்பட்டது .

இந்த தேடுதல் வேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் வெற்றி கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த தேடுதல் வேட்டையில் மோப்ப நாயைத் தொடர்ந்து ஈடுபடுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

You'r reading கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய் உதவியுடன் சோதனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை