சுவாமி வீதி உலாவிற்கு அனுமதி பெறும் விவகாரம்... சிதம்பரம் தீட்சிதர்களிடையே கருத்து வேறுபாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமியம்மன் ஐப்பசி திருவிழாவிற்குச் சுவாமி வீதி உலா நடத்த அரசு அனுமதி பெறவேண்டும் என்பதில் தீட்சிதர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது

by Balaji, Nov 2, 2020, 09:48 AM IST

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகாமசுந்தரி அம்மன் தனி சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் உற்சவத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா தற்போது துவங்கி உள்ளது.பத்து தினங்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் நகரின் நான்கு வீதிகளிலும் சுவாமி வீதியுலா நடப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உள்ளத்தால் வீதி உலா நடத்த அரசிடம் உரிய முறையில் அனுமதி பெற வேண்டும் எனக் காவல் மற்றும் வருவாய்த்துறையினர் கோயில் தீட்சிதர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரக்கத்தின் சித்தரே ஆனால் இதற்குக் கொள்ளவில்லை இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டும். அப்படி என்றால் வீதி உலாவே நடத்தப் படவேண்டாம் என்று தெரிவித்து விட்டனர்.

எடுத்து நேற்றிரவு சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். அப்போது சுவாமி வீதி உலாவிற்கு உரிய முறையில் கடிதம் எழுதிக் கொடுத்து அனுமதி பெற வேண்டும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது. . இதற்குத் தீட்சிதர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவாமி வீதியுலா நிகழ்ச்சிக்கெல்லாம் அனுமதி கேட்கும் பழக்கமே இல்லை எனச் சொல்லி சில தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் கோபமடைந்த தீட்சிதர்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறினர் . அதே சமயம் தீட்சிதர்களில் இன்னொரு தரப்பினர், நாங்கள் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டம் முவுக்கு வந்தது.

வீதியுலா நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறும் விவகாரத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading சுவாமி வீதி உலாவிற்கு அனுமதி பெறும் விவகாரம்... சிதம்பரம் தீட்சிதர்களிடையே கருத்து வேறுபாடு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை