சாத்தான்குளம் போலீஸ் தாக்கி தந்தை மகன் இறப்பு: வழக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி துவக்கம்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனா காலத்தில் குறித்த நேரத்தில் கடையை அடைக்கவில்லை என்று கூறி அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து சிறிதும் இரக்கம் இல்லாமல் போலீசாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன். ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுவதாக சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் அளித்தார். இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கின்றோம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு அனைத்துக்கும் கட்டுப்படுவோம் ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர்.

இவர்கள்தான் தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமான தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது சிபிஐ விசாரணையில் ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். மேலும் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை இம்மாதம் 11ஆம் தேதி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது. எனவே எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>