திருத்தணி வேல் யாத்திரை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜகவினர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு மின் விசிறி இல்லை என்று கூறி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த எஸ்பி அரவிந்தனை தொண்டர்கள் சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேல் யாத்திரை மீட்டும் துவக்கும் என திருத்தணியில் பேட்டி திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணியில் அனுமதியின்றி வேல் யாத்திரையை துவங்கிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வெற்றிவேல் யாத்திரை தமிழகம் முழுவதும் தொடரும் என்றார். அது எப்போது துவங்கும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எங்களுடைய வேல் துள்ளிவரும் வேலாக தான் இருக்கும். தடைகளை உடைக்கும் வேலாக தான் இருக்க போகிறது. தமிழக அரசாங்கம் இந்த யாத்திரைக்கு தடை விதித்தது ஏமாற்றத்தை கொடுக்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் எங்களது யாத்திரையை தொடர்ந்து செல்வோம் வெற்றிவேல் யாத்திரை மீண்டும் தொடரும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.