நடு இரவில் பயங்கரம்..! மனைவியின் நடத்தையை சந்தேகப்பட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை..

by Logeswari, Nov 9, 2020, 21:30 PM IST

ஊத்தங்கரை பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் நடு இரவில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தையல் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்மணி. இவர் தனியார் ஷூ கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தங்கராஜ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் சில காலங்களாக மனைவி ருக்மணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இவருக்கு குடிப்பழக்கமும் அதிகமாகியுள்ளது. தினமும் மூக்கு முட்ட குடித்து விட்டு வீட்டில் உள்ள மனைவியிடம் சண்டை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சம்பவ நாளன்று தங்கராஜ் குடித்து விட்டு ருக்மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிரித்து விட்டு சமாதானம் செய்து வைத்து விட்டு சென்றனர். பிறகு இருவரும் தூங்கியுள்ளனர். நடு இரவில் எழுந்த தங்கராஜ் ருக்மணியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருக்மணியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கராஜை மனைவியை கொலை செய்த பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை