தீபாவளி வரை சினிமா டிக்கெட் இலவசம் : கடலூரில் கலக்கல்

by Balaji, Nov 10, 2020, 16:09 PM IST

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள போதிலும் ரசிகர்கள் வரவேற்பு இல்லை. இலவசமாகத் திரையிடப்படும் என அறிவித்துள்ளதுஎட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்க அரசு அனுமதித்தது. எனினும் சுமார் 50 சதவீத திரையரங்குகளே திறக்கப்பட்டது. அந்த திரையரங்குகளிலும் ரசிகர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பழைய திரைப்படங்களே திரையிடப்பட்டன. இதில் கடலூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் இன்று முதல் தீபாவளி வரை இலவசமாகக் காட்சிகள் ஒளிபரப்பப்படுமென்றும் ரசிகர்கள் இலவசமாக டிக்கெட் பெற்று திரைபடம் பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.

சென்னை சத்யம் திரையரங்கில் தாராள பிரபு மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன காட்சிகள் தொடங்கின. ஆனால் முதல் காட்சிக்கு வெறும் 20 பேர் மட்டுமே திரையரங்குக்கு வந்தனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக உள்ளே வரும் அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதிக்கப்படப்பட்ட பின்னரே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

More Cuddalore News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை